×

மாநில சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறைாக பேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப தனி சேனல்: கேரளாவில் தொடக்கம்!

திருவனந்தபுரம்: மாநில சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறைாக பேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப கேரளாவில் தனி சேனல் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை, மக்களவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு தனியாக சேனல் உள்ள நிலையில், மாநிலச் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை மட்டும் ஒளிபரப்புச் செய்ய எந்த மாநிலத்திலும் தனியாகச் சேனல் இல்லை. ஆனால், நாட்டிலேயே முதல்முறையாக கேரள மாநிலம், இந்தச் சேனலை மலையாளத்தின் சிங்கம் ஆண்டின் முதல்நாளான நேற்று தொடங்கியது. சபா டிவி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சேனல் தொடக்க விழா நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா காணொலி மூலம் பங்கேற்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து பேசிய அம்மாநில சட்டப்பேரவை தலைவா் பி.ஸ்ரீராமகிருஷ்ணன், சட்டப்பேரவையின் வரலாறு, அங்கு நடைபெறும் விவாதங்கள், நிறைவேற்றப்படும் மசோதாக்கள் உள்ளிட்டவை தொடா்பாக பொதுமக்கள் இடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதே சபா டிவி தொலைக்காட்சியின் நோக்கம்.

பல்வேறு சேனல்களில் நேரம் குறித்து ஒதுக்கீடு கிடைத்தபின், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேரவையில் நடக்கும் விவாதங்கள் குறித்துநேரலையில் ஒளிபரப்புச் செய்யப்படும். இந்த சேனல் தொடங்கப்பட்டதோடு, ஓடிபி பிளாட்பார்ம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த சேனலைக் காண முடியும். மேலும், இந்தச் சேனலில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தங்கள் தொகுதி குறித்து பேசவும், சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சிகளும் நடைபெறும். கடந்த ஆண்டு பேரவையில் காகிதப்பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு அனைத்தும் மின்னணுமயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசுக்கு ஓர் ஆண்டில் ரூ.30 கோடி சேமிக்கப்படும். மாநிலத்தின் பல்வேறு கலைகளையும், கலாச்சாரங்களையும் விளக்கும் வகையில் பிரத்யேகத் திரைப்படங்களும் இந்தச் சேனலில் ஒளிபரப்பாகும், இல்லாவிட்டால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த சேனலுக்கு வரவேற்பு இருக்காது, என தெரிவிவித்துள்ளார். 


Tags : proceedings ,Kerala ,state legislature ,assembly , Kerala, Legislature, Channel, Sabah TV
× RELATED இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள்...